சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் தல தோனி ஈடுபட்டுள்ளார்.
17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழ்நாடு மீனவர்கள் கைது!








