தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உர வழங்கல் திட்டத்தின்படி யூரியா மற்றும் டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் முழுமையாக வழங்க வலியுறுத்தியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உரங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களுக்கு வந்தடைய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தற்போது 25.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உரங்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







