திமுகவை விலக்கி விட்டு அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமென்றும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெங்கமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிலம்பம் சுற்றி சிறுமி வரவேற்றார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெங்கமேடு பகுதியில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்று அளித்தனர். மேலும், அமைச்சருக்கு அங்குள்ள சிறுமி ஒருவர் சிலம்பம் விளையாடி வரவேற்பு அளித்தது பொதுமக்களை கவர்ந்தது.
மேலும், அந்த சிறுமி இரண்டு கைகளால் சிலம்பம் சுற்றி தனது சிலம்பக்கலை மூலம் ஊருக்குள் வரவேற்றார். அப்போது பேசிய அவர், திமுக கட்சியினர் ஆங்காங்கே தற்போதே கரைவேஷ்டிகளை கட்டிக்கொண்டு வெளியே வருகின்றனர். காரணம், வரும் ஆட்சி திமுக ஆட்சி என்றும் ஏற்கனவே புரோட்டா கடை முதல் ப்யூட்டி பார்லர் வரை ஆங்காங்கே ரெளடியிசம் செய்து மக்களை மிரட்டி வருவதாகவும் பிறர் சொத்துக்களை அபகரித்து விடுவார்கள் என அவர் கூறினார்.







