தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், சொன்னதை செய்யும் ஆட்சி அதிமுக ஆட்சி எனக் கூறினார். நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளார் சட்ட மசோதா குறித்த விவாதத்தின்போது திமுக வெளிநடப்பு செய்தது எனவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜான்பாண்டியனும் தானும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் இருவரையும் வெற்றி பெற வைத்தால் இரட்டை குழல் துப்பாக்கிகள் போல இணைந்து மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.







