புதுச்சேரியில் மிஸ்டர் & மிஸஸ் போட்டி: வண்ண உடையில் மிளிர்ந்த மாடல்கள்!

புதுச்சேரியில் நடைபெற்ற மிஸ்டர் & மிஸஸ் போட்டியில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று கட்டுடலை காட்டியும், வண்ண உடையணிந்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர். பாண்டிச்சேரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் முதல்முறையாக “மிஸ்டர் & மிஸஸ் பாண்டிச்சேரி…

புதுச்சேரியில் நடைபெற்ற மிஸ்டர் & மிஸஸ் போட்டியில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று கட்டுடலை காட்டியும், வண்ண உடையணிந்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

பாண்டிச்சேரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் முதல்முறையாக “மிஸ்டர் &
மிஸஸ் பாண்டிச்சேரி 2023“ என்ற நிகழ்ச்சி கடற்கரை சாலையில் உள்ள காந்தி
திடலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட ஆணழகன்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுடலை காட்டி பார்வையாளர்களை கவர்ந்தனர். போட்டிகள் 55, 60, 65 ,70 கிலோ மற்றும் 80-கிலோ எடைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு பணம் வழங்கப்பட்டது.

இதேபோன்று நடைபெற்ற “மிஸஸ் பாண்டிச்சேரி 2023“ நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பின்னா் பேஷன்-ஷோ நடைபெற்றதில், வண்ண ஆடைகள் அணிந்து ஏராளமான அழகிகள் ஒய்யார நடையில் பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.