இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ; பிவி சிந்து முன்னேற்றம்

இந்தோனேசியா ஓபன் மகளிர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் என்பது மலேசிய ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிற்கு…

இந்தோனேசியா ஓபன் மகளிர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் என்பது மலேசிய ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிற்கு நிகரான மூன்றாவது மிகப்பெரிய பேட்மிண்டன் போட்டி நிகழ்வாகும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் இன்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள பல வீரர்களும் தற்போது ஜகார்த்தா சென்று போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரணாய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.

இதில் ஏற்கனவே ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், நிஷிமோட்டோவை 21-16, 21-14, என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். அந்த வரிசையில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே கிரேகேரியா மரிஸ்காவிடம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியிலும், மலேசிய மாஸ்டர்ஸ் அரையிறுதியிலும் சந்தித்து பிவி சிந்து தோல்வியுற்றிருந்த நிலையில், இந்த வெற்றி அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஜூன் 14 ஆம் தேதியான நாளை நடைபெற உள்ள 2வது சுற்றில் பிவி சிந்து தைவானின் தை ட்ஸூ யிங்கை எதிர்கொள்கிறார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.