எம்.பி கார்த்தி சிதம்பரம் ட்வீட்டுக்கு எம்.பி மாணிக்கம் தாக்கூர் பதில்!

தந்தையால் பதவி பெற்றவர்களுக்கு உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் வலி தெரியாது என கார்த்தி சிதம்பரம் ட்விட் குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் வரும் 14ம் தேதி நடைபெறவிருக்கும் அவனியாபுரம்…

தந்தையால் பதவி பெற்றவர்களுக்கு உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் வலி தெரியாது என கார்த்தி சிதம்பரம் ட்விட் குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் வரும் 14ம் தேதி நடைபெறவிருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வரும் ராகுல் காந்தி வருகை தரவுள்ளார். அவரின் வரவேற்பு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இவ்வளவு பெரிய கமிட்டி அமைத்து எந்த பயனும் இல்லை” என்ற கார்த்திக் சிதம்பரத்தின் ட்வீட் குறித்து பேசினார். அதில், உழைக்கின்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கு தான் உண்மையான வலி தெரியும் என்றும் தந்தையின் வழியில் பதவிக்கு வந்தவர்களுக்கு அதைப் பற்றி தெரியாது என்றும் மாணிக்கம் தாகூர் விமர்சனம்

மேலும் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், மதச்சார்பற்ற கூட்டணியுடன் சேர்ந்து கமல்ஹாசன் பணியாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply