168 மில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய விலங்கான டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பிரான்ஸில் 1640 அடிக்கு கீழ் உள்ள குகை ஒன்றின் மேற்கூரையில் மிகப்பெரிய கால்தடம் ஒன்று கண்டறியப்பட்டது. இது டைட்டனோசரின் கால்தடமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். டைட்டனோசர் என்பது டைனோசர் குடும்பத்தின் ஒரு அங்கம் ஆகும். இந்த விலங்குகளின் கழுத்து மிக நீளமானதாக இருக்கும். 121 அடி நீள கழுத்து மற்றும் 1,38,000 பவுண்டு எடை கொண்ட இந்த டைட்டனோசர் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா பகுதிகளில் வசித்து வந்துள்ளது.
காலப்போக்கில் இந்த பகுதி பல அடி தூரம் பூமிக்கு அடியில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மூலம் மனித நாகரிகம் தோன்றிய காலத்தை கணக்கிடுவதற்கும் எளிதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.







