பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா, நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்…

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா, நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில், நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி மற்றும் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அண்மைச் செய்தி: ‘பிரதமர் மோடியிடம், 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர்’

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக.வின் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று, கட்டாயம் கலந்து கொள்வதாக சோனியாகாந்தி உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.