அளவுக்கு அதிகமானால் அழுகையும் நஞ்சு; திருமணத்தன்று பரிதாபமாக உயிரிழந்த மணமகள்

திருமணம் முடிந்து பிரியாவிடை பெற்ற மணமகள் சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தின் ஜூலுண்டா கிராமத்தைச் சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பருக்கும் பலங்கீர்…

திருமணம் முடிந்து பிரியாவிடை பெற்ற மணமகள் சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தின் ஜூலுண்டா கிராமத்தைச் சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பருக்கும் பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தைச் சேர்ந்த பிசிகேசனுடன் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. அதன்பின் மணப்பெண்ணை அவரது மாமியார் வீட்டிற்கு அனுப்பவதற்கான சடங்குகளை பெண் வீட்டார் செய்து வந்தனர். அப்போது மணப்பெண் தனது குடுமத்தினரை பிரிந்து செல்வதை நினைத்து நீண்ட நேரம் அழுது வந்துள்ளார்.

இதனால், மயக்கமுற்ற குப்தேஸ்வரி அப்படியே தரையில் சரிந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், அவரது உடலில் எந்த அசைவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகமாக அழுததால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.