தாய் மகன் இருவரும் ஒரே நேரத்தில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் லதா. இவர் தன் கணவர் பரத்வாஜிடம், 2 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று தனது 10 வயது மகன் தவஞ் குமாருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், லதா இன்று காலை 6:30 மணியளவில் மகனுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்துள்ளார், அப்போது ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த லதாவின் மகன் தவஞ் குமார் உடனடியாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார்.
அத்தோடு அக்கம் பக்கத்தினரிடமும் உதவி கேட்டு அழைத்துள்ளார். அங்குள்ள அக்கம் பக்கத்தினர் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, லதா வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார், அங்கு இருந்த தவஞ் குமாரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி தவஞ் குமாரும் உயிரிழந்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்குபதிவு செய்து லதாவின் செல்போனில் நேற்று இரவு முதல் பதிவாகியிருந்த தொலைபேசி அழைப்புகளையும் தொடர்பு கொண்டு என்ன பிரச்சினை என்பதனை விசாரித்து வருகின்றனர்.
- கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








