புதுச்சேரியில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஐஜி சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு அதிகப்படியாக வெளி மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்துள்ளதால் அனைத்து ரயில்களையும் சோதனை செய்ய, ஐஜி சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த ஐஜி சந்திரன், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாவது தெரியவந்துள்ளதால், மாணவர்களை பெற்றோர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், கஞ்சா விற்பனை குறித்து 112 என்ற இலவச எண்ணிலும், 9489205039 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்
மேலும், இதுவரை கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாகவும், இனி கஞ்சா வாங்கி உபயோகிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கஞ்சா விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தனிப்படை அமைத்து சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








