‘ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் – முதலமைச்சர் பதவி விலக வேண்டும்’

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம்…

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மயிலாடுதுறையின் ஆளுநர் வாகனத்தின் மீது திக, திமுக உள்ளிட்ட கட்சியினர் கொடிக்கம்புகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து உயிரிழப்பு
அப்போது, தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், திமுக தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் நடந்த தாக்குதல் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

அண்மைச் செய்தி: ‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்

மேலும், ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். இதேபோல, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதையே, ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் காட்டுவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.