முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

முடிந்தது குவாரன்டைன்.. தெம்பாகத் திரும்புகிறார் மோர்கன்

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்கன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பு, இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மோர்கன் தலைமையிலான அணி தனிமைப் படுத்தப்பட்டது.

இதையடுத்து ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 9 அறிமுக வீரர்களுடன் புதிய டீம் அறிவிக்கப்பட்டது. அவர் தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடி, தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி, நாட்டிங்காமில் நடக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த இயான் மோர்கன் குவாரண் டைன் முடிந்து இந்த தொடருக்குத் தெம்பாக திரும்புகிறார். அவர் தலைமையில், 16 வீரர்கள் அடங்கிய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பழைய அணியில் இருந்த ஜேசன் ராய், பேர்ஸ்டோ, மொயீன் அலி, ஜாஸ் பட்லர் உள்பட 9 வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள் ளனர்.

ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ஷகிப் முகமது, கிரிகோரி, டேவிட் மலான், பார்கின்சன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: முதல்வர் விமர்சனம்

Gayathri Venkatesan

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Vandhana

எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Halley Karthik