கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை – உழவர் நலத்துறையில் 1145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 28 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மழைநீரால் சூழப்பட்டிருப்பதாகவும், மழைநீர் வடிந்த பிறகு பாதிப்பை கணக்கிட அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 2 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ள நிலையில் நடப்பாண்டு ஐந்து லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்திருப்பதாகவும், பாதிப்பின் அளவுக்கு ஏற்ற வகையில் பயிர்க்காப்பீடு தொகை பெற்றுத்தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தியை பொறுத்தவரையில் மக்களின் முடிவே அரசின் முடிவு எனவும் அமைச்சர் கூறினார். மேலும் உயர்ந்து வரும் சின்ன வெங்காயம் விலையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.