முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று திருப்பதி நடை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் மூடப்படும் என நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் இருந்து சந்திர கிரகணத்தை காண இயலும். ழுமு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண இயலாது. முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகனை கொல்கத்தா, கௌகாத்தி, கோஹிமா, அகர்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காணக் கூடியதாக இருக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திரகிரகணம் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கம். பின்னர் பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது. தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரணகத்தை காண இயலும்.
முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி கோவில் நடை மூடப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான அனைத்து கோயில்களும் நவ.8ம் தேதி மூடப்பட உள்ளது.








