பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர வெளிமாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளன என அமைச்சர் எ வ வேலு கூறினார்.
சென்னை அடையாற்றில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர் எ வ வேலு ஆய்வு செய்தார். தொடர்ந்து கிண்டியில் கட்டப்பட்டு வரும் அயோத்திதாசர் மணிமண்டபப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ வ வேலு, ‘ ரூ 2.48 கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருவதாகவும், அம்பேத்கர் மணிமண்டபம் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பட அம்பேத்கர் சிலையை வரும் 27 ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என அவர் தெரிவித்தார்.
மேலும், மதுரவாயல் துறைமுகம் சாலைக்கு மாநில அரசு சார்பாக செய்யக்கூடிய பணிகளைச் செய்து 2 ஆண்டுகளுக்குள்ளாக பணிகளை முடிப்பதற்கு உதவுவோம் எனவும், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர வெளிமாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது பணிகள் 95% முடிவடைந்துள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் இரவு நேரத்தில் மட்டுமே பணிகளை தொடங்க வேண்டியுள்ளது. இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 5 மணிக்குள்ளாக முடிக்க வேண்டியுள்ளது.சென்னையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடைபெறும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் சில இடங்களில் சாலை குறுகியதாக உள்ளது. விதிகளுக்குட்பட்டு வீடுகளை அகற்ற 6 மாத காலமாகிவிடும் என பேசினார்.







