அமெரிக்காவில் இன்று கொண்டாடப்படுகிறது ’தீபாவளி’

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆலயத்தில் வழிபாடு செய்து, ஒரே இடத்தில் பட்டாசுகள் கொளுத்தி அமெரிக்க வாழ் இந்தியர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.  இந்துக்களின் முக்கிய பண்டிகையான ’தீபாவளி’ இந்தியாவில் நேற்று மிக விமரிசையாக…

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆலயத்தில் வழிபாடு செய்து, ஒரே இடத்தில் பட்டாசுகள் கொளுத்தி அமெரிக்க வாழ் இந்தியர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். 

இந்துக்களின் முக்கிய பண்டிகையான ’தீபாவளி’ இந்தியாவில் நேற்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, தீபாவளிப் பண்டிகை மக்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 12 மணி நேர வித்தியாசம் உள்ள அமெரிக்காவில் தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், இன்று அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

காலையில் வீடுகளில் பூஜை செய்து படையலிடும் அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாலை வேளையில் அங்குள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து, தொடர்ந்து ஒரே இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இன்று டெலவேர் மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில், அங்குள்ள இந்தியர்கள் கூட்டமாக சென்று சுவாமி தரிசனம் செய்து, கோயில் அருகே உள்ள மைதானத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெலவேர், நியூஜெர்சி, பென்சில்வேனியா, நியூயார்க் ஆகிய மாகாணங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.