பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவைகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் அதிக மழை பெய்யும்போதெல்லாம் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டது. இந்த ஆண்டு பருவ மழையால் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.








