தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ள தகவலில், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் செயலிகள் வாயிலாகவும் மற்றும் ஆன்லைன்வழியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள், கட்சிகளின் செலவினங்களை பார்வையிட செலவின பார்வையாளர்கள் எட்டாம் தேதி தமிழகம் வருவதாக சத்தியா பிரதா சாகு குறிப்பிட்டுள்ளார்.







