மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ இன்று வெளியாகிறது…!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள் த்ரிஷ்யம் 3 திரைப்படம் இன்று வெளியாகிறது.

மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் ’த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கியிருந்த இப்படத்தில் மீனா முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இதுவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் இன்று வெளியாகிறது. ஆசிர்வாத் சினிமாஸ் இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், சித்திக், ஆஷா சரத், சாந்தி மாயாதேவி, வீணா நந்தகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

“திரிஷ்யம் 3” திரைப்படம் ரிலீசுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டும் ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.