மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
மலையாள நடிகர் பிரித்விராஜ் தமிழில் ’மொழி’, ’நினைத்தாலே இனிக்கும்’, ’சத்தம் போடாதே’, ’காவியத் தலைவன்’, ’ராவணன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலவை வைத்து இயக்கிய ’லூசிபர்’ திரைப்படம் ஹிட் ஆனது. சர்வதேச அளவில் வசூலைக் குவித்தது. படத்தின் திரைக்கதையை சினிமா விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினர்.

இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகர் மோகன் லாலை வைத்து பிரித்விராஜ் ’ப்ரோ டாடி’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ளார்.







