இந்தியாவில் ‘5ஜி’யின் நிலை என்ன?

கடந்த 2020ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 4ஜி சேவை செலுத்திய ஆதிக்கம் 2026ஆம் ஆண்டு வரையிலும்தொடரும் என்று எரிக்சன் நிறுவனத்தின் மொபிலிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 61 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் 4ஜி…

கடந்த 2020ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 4ஜி சேவை செலுத்திய ஆதிக்கம் 2026ஆம் ஆண்டு வரையிலும்
தொடரும் என்று எரிக்சன் நிறுவனத்தின் மொபிலிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது வரை இந்தியாவில் 61 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் 4ஜி சேவையை பயன்படுத்துகின்றனர் என்றும், 2026ல் அது 66 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்ள்ளது. அதாவது, இந்தியாவின் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு 68 கோடியிலிருந்து 83 கோடியாக அதிகரிக்கும் என அவ்வறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5ஜி மொபைல் சந்தாதாரர்கள் சுமார் 26 சதவீதமாக, அதாவது 33 கோடிக்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 வரை 81 கோடியாக இருந்த ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை, 2026 வாக்கில் 120 கோடியாக அதிகரிக்கும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் மாதத்திற்கு 13ஜிபியாக இருந்த ஸ்மார்ட்போன் இணைய சேவை பயன்பாடு 2020ஆம் ஆண்டில் மாதத்திற்கு 14.6ஜிபியாக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் இணைய சேவை பயன்பாட்டில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும், 2026 ஆம்ஆண்டில் இணைய டேட்டா பயன்பாடானது மாதத்திற்கு 40ஜிபி வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் குறைந்தது 4 கோடி ஸ்மார்ட்போன் பயனர்கள் 5G சேவை அறிமுகமாகும் வருடத்திலேயே, பயன்படுத்த தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக 50 சதவிகிதம் கூடுதல் செலவை செய்யவும் அவர்கள் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 67 சதவீத ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஜி கிடைத்தவுடன் அதை உடனடியாக பயன்படுத்தும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.