நாமக்கல்லை அடுத்த மோகனூர் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் மோகனுார் அக்ரஹராம் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ள
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத
திருவோணநட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம், கருட சேவை நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக பட்டாச்சாரியார் திருக்கோடி தீபம், கருட சேவையில் உள்ள எம்பெருமான் மூலவர்,சக்கரத்தாழ்வார், பத்மாவதி தாயார், தன் வந்திரி,உள்ளிபிரசன்னக்கப்பட்டது. கோவில் முன் உள்ள கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கு பெற்றனர்.
—ரெ.வீரம்மாதேவி







