முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராவணனை பற்றி பேசுகிறார்கள்- காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி

கடவுள் ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராவணனைப் பற்றி பேசுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வரும் 5ந்தேதி 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தம்மை மோசமான வார்த்தைகள் கொண்டு விமர்சிப்பதில் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கொருவரிடையே போட்டியே நடப்பதாக தெரிவித்தார். தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடவுள் ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராமாயணத்திலிருந்து ராவணனை மேற்கோள்காட்டி பேசுகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். மோசமான வார்த்தைகளால் தம்மை விமர்சித்தவர்கள் அதற்காக வருத்தம்கூட தெரிவிக்காததை நினைத்து தமக்கு ஆச்சர்யமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,  உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை காண்பித்து பாஜகவினர் வாக்கு சேகரிப்பதை விமர்சித்தார். பிரதமர் மோடிக்கு என்ன ராவணனைப் போன்று 100 தலைகளா இருக்கு?  எல்லா இடத்திலும் வந்து நிற்பதற்கு எனக் கூறிய அவர், உள்ளாட்சி அமைப்பு தொடர்பான பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடியா வந்து நிற்பார் எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக கலோல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதி?

Arivazhagan Chinnasamy

’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்

Web Editor

நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!

EZHILARASAN D