சதவீதம் தான் இந்திய அளவில் பார்க்கும் பொழுது எய்ட்ஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைவு தான் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்க பட்டு வருகிறது எய்ட்ஸ் நோயாளிகள் சரிசமமாக நடத்த வேண்டும் என்பது தான் நிகழ்ச்சியின் கருப்பொருள். இந்திய அளவில் எய்ட்ஸ் பார்க்கும் பொழுது 0.24 சதவீதம், தமிழகம் அளவில் 0.18 சதவீதம் தான்.
இந்திய அளவில் பார்க்கும் பொழுது தமிழகத்தில் குறைவு தான். இன்னும் குறைய வேண்டும். என்பது தான் தமிழக அரசின் நோக்கம் குறிக்கோள் தமிழகத்தில் எச்.ஐ. வி. குறைக்க இயங்க பட்டுவரும் அறக்கட்டளை மூலம் 25 கோடி நிதி சேர்ந்துள்ளது என பேசினார்.
மேலும், அதில் 3500 குழந்தைகளுக்கு தமிழ் நாடு முழுவதும் எச்.ஐ. வி. பாதிக்க பட்ட
குழந்தைகளுக்கு உதவி தொகையாக பயன் படுத்த படுகிறது. இந்திய அளவில் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் எய்ட்ஸ்1.24 ஆயிரம் பேருக்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எச்ஐவி குறைக்கும் வகையில் 2900நம்பிக்கை மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது அதை குறைக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
அத்துடன், பாதிக்க பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒன்பது தனியார் கல்லூரிகளில் இந்த சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்து வருபவர்கள், பற்றி தெரிந்து கொள்ள ரத்தம் தேவை படுபவர்கள் அங்கே சென்று உதவி வழங்கும் வகையில் app விரைவில் கொண்டு வர இருக்கின்றன என்றார்.
மேலும், இந்திய அளவில் மேற்குவங்கம் தமிழகம் தான் ரத்ததானம் அதிக அளவில்
கொடுப்பவர்கள் உள்ளனர். எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் கூறினார்.