முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை

வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் ஆப்கன் நிலவரம், இந்தோ – பசிபிக் சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மகாத்மாவின் பிறந்த நாளை குறிப்பிட்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காந்தியின் சமூக பொருளாதார கொள்கை தற்போதைய உலகத்திற்குத் தேவையான ஒன்று என கூறியுள்ளார்.

தொடர்ந்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாதம், பாதுகாப்பு, வர்த்தகம், கோவிட், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, துணை அதிபர் கமலா ஹாரிசும் உடன் இருந்தார்.

Advertisement:
SHARE

Related posts

கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனைவி!

Halley karthi

அசையா சொத்துகளை விற்க ஏர் இந்தியா முடிவு!

கார் விபத்து; யாஷிகா ஆனந்த் மீது வழக்குப் பதிவு

Saravana Kumar