உத்வேகத்தின் ஆதாரம் கமலா ஹாரிஸ் : பிரதமர் மோடி

உலகெங்கிலும் உள்ள பலருக்கு, உத்வேகத்தின் ஆதாரமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபரும், தமிழக வம்சாவ ளியைக்…

உலகெங்கிலும் உள்ள பலருக்கு, உத்வேகத்தின் ஆதாரமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபரும், தமிழக வம்சாவ ளியைக் கொண்டவருமான கமலா ஹாரிசை, சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்ததற்கும், தினமும் ஒருகோடி பேருக்கு தடுப்பூசி போடும் திறனை மேம்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், அமெரிக்காவிற்கு இந்தியா முக்கியமான நட்பு நாடு எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார் பருவநிலை மாற்றம் குறித்து இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கையை சுட்டிக்காட்டிய அவர், இதில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றினால் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடும் எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கோவிட் இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப் பட்டபோது, உதவிக்கரம் நீட்டியதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார். அமெரிக் காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்ய்ப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு எனக்கூறிய பிரதமர் மோடி, உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக விளங்குவதாகவும் பாராட்டு தெரிவித்தார். இருநாடுகள் இடையேயான உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, கமலா ஹாரிஸ் வருகையை இந்திய மக்கள் எதிர்பார்த்து இருப்பதாகவும் எனக்கூறி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.