முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்

உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் கிராம ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைப்பாக்கம் மற்றும் ஆற்காடு ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்து வைத்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்பது கேள்வி குறிதான் என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

பள்ளிகள் திறப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

Saravana Kumar

கொரோனா பாதிப்பு : பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Halley karthi

தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

Ezhilarasan