பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட ‘நவீன’ ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடைபெற்ற கோழி பிடிக்கும் போட்டியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. …

திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடைபெற்ற கோழி பிடிக்கும் போட்டியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளும் வகையில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு போட்டியை உருவாக்கியுள்ளனர்.  ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் பிடிப்பது வழக்கம். ஆனால்  நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் கோழியை பிடிப்பதுதான் முக்கியமான இலக்கு.

இந்த போட்டியில் ஒரு பெரிய வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் ஒரு பெண் அல்லது குழந்தையின் கண்களைக் கட்டி ஒரு காலில் கயிற்றின் ஒரு முனையையும் மற்றொரு முனையை கோழியின் கால்களிலும் கட்டிவிடுவார்கள்.  இதில் விதிமுறைகளுக்கு உட்பட்டு கோழியை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடைபெற்றன.

இதையும் படியுங்கள்: மதுரா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு – ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை! 

இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.  கோழியை தவறவிட்டவர்கள், வட்டத்துக்கு வெளியே வந்தவர்கள், கோழியை பிடிக்க கடைசி வரை கைகளால் தடவிக் கொண்டே இருந்தவர்கள் என பலரும் பல்வேறு விதமாக விளையாடியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.