முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கார்னிவல் திருவிழா – காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கார்னிவல் திருவிழா காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரிச்சூகுடியில் தொடங்கி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த குதிரைகள் கலந்து கொண்டன. இதேபோன்று காளைகளுக்கும் போட்டி நடைபெற்றது. சீறிப்பாய்ந்த குதிரைகளையும் காளைகளையும சாலையில் இருபுறமும் பொதுமக்கள் கூடியிருந்து உற்சாகப்படுத்தி கண்டு களித்தனர்.

இரு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் சந்திர பிரியங்காவின் குதிரை முதலிடத்தை பெற்றது. காளைமாடுகள் ரேக்ளா போட்டியில் காரைக்கால் பூவம் பகுதி சேர்ந்த மாடு வெற்றி பெற்றது.

இதனிடையே கார்னிவல் திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்- டி.டி.வி. தினகரன்

Web Editor

ராகுல் காந்தி வருகை: காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிப்பு

Web Editor

உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D