#MNM | மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு.. பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!

மநீம பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் அக்கட்சியின் நிரந்தர தலைவர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.…

#MNM | Kamal Haasan re-elected as chairman of People's Justice Center.. Unanimous decision in General Committee meeting!

மநீம பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் அக்கட்சியின் நிரந்தர தலைவர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அத்துடன் கட்சி நிர்வாகிகள், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2570 பேர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் முதல் பொதுக் குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒவ்வொரு சட்டமன்றத்திலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு பூத்துக்கு 5 நபர் நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல, பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.