மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா: 200-க்கும் குறைவான பிரமுகர்களை அழைக்கத் திட்டம்!

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சியில் 200-க்கும் குறைவான முக்கிய பிரமுகர்களை அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று…

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சியில் 200-க்கும் குறைவான முக்கிய பிரமுகர்களை அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தி.மு.க.வுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்நிலையில் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் அளித்தார். இதையடுத்து அவர் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இதில் 200-க்கும் குறைவான முக்கிய பிரமுகர்களை அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கியமான அதிகாரிகள், மு.க.ஸ்டாலினின் உறவினர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் கல்நதுகொள்ள கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.