கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் தனது தலைமையிலான அரசு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகக் கூறியுள்ளார். கட்சி பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு சென்று பொதுமக்களுக்கு உதவி செய்து அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தங்கள் தொகுதிகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ள அவர், தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்பிட அனைவரும் இணைந்து நிற்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.