கருணாநிதி நினைவு நாள்: எளிமையாக கடைபிடிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அலங்காரங்கள், ஒலிப்பெருக்கிகளை தவிர்த்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை எளிமையாக கடைபிடிக்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக…

அலங்காரங்கள், ஒலிப்பெருக்கிகளை தவிர்த்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை எளிமையாக கடைபிடிக்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தல் களத்தில் தென்றலை தீண்டவில்லை என்றும், தீயை தாண்டி வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் – பேரிடர் – சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, தி.மு.க அளித்த – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு தாம் செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி நினைவு நாளான வரும் 7-ம் தேதி, கொரோனா கால நெறிமுறைகளை கடைப்பிடித்து, அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதியின் படத்தை வைத்து, புகழ் வணக்கம் செலுத்தலாம் என்றும், பெரு விழாக்கள் வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.