இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,726 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,09,74,748 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,11,076 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் வீதம் 2.37 ஆகவும், தினசரி பரவல் வீதம் 2.58 ஆகவும், குணமடைவோர் வீதம் 97.37 ஆகவும் உள்ளது.” என தெரிவித்துள்ளது.
உயிரிழப்பை பொறுத்த அளவில், 533 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,26,290 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,55,115 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 48,93,42,295 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், “கடந்த 24 மணிநேரத்தில், 16,64,030 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 47,48,93,363 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








