முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தப் படத்தில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால், சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
மகாவதார் பாபாஜியின் கருணையும் அருளும் என்றும் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்

Ezhilarasan

கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Saravana Kumar

எஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அரிவாளால் வெட்டியதாக மணிகண்டன் வாக்குமூலம்

Halley Karthik