முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பு வாட்ச் திருட்டு: அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டது எப்படி?

பிரபல கால்பந்து வீரர் மாரடோனாவின் ரூ.20 மதிப்புள்ள கைகடிகாரத்தை திருடிய அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பிரபல கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா. அர்ஜெண்டினாவை சேர்ந்தவரான இவர், விலைமதிப்புள்ள பல கடிகாரங்களை அணிவதை வழக்கமாக கொண்டவர். ஹுப்லாட் ( Hublot) என்ற லிமிடெட் எடிசன் வாட்சையும் அவர் அணிந்து வந்தார். இதன் இந்திய மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. அவர் கையெழுத்திட்ட இந்த வகை வாட்ச் ஒன்று, அவர் மறைவுக்குப் பிறகு துபாயில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த கடிகாரம் சில மாதங்களுக்கு முன் துபாயில் திருடு போனது. அதை திருடியவர் இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார் என்று தகவல் தெரியவந்தது. இதுபற்றி துபாய் போலீசார், இந்திய போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்படி அந்த வாட்சை திருடியவர் அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியைச் சேர்ந்த வாசித் ஹுசைன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அந்த வாட்சை மீட்டனர்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இதை தெரிவித்துள்ளார். துபாய் காவல்துறையுடன் அசாம் காவல்துறை இணைந்து மாரடோனாவிடம் இருந்து திருடப்பட்ட ஹுப்லாட் கைக்கடிகாரத்தை மீட்டதாகவும் வாசித் ஹுசைன் என்பவர் கைதுசெய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாராடோனாவின் மறைவுக்குப் பிறகு அவர் உடமைகளை பாதுகாக்கும் துபாய் நிறுவனத்தில் காவலாளியாக வாசித் ஹூசைன் பணியாற்றினார். கடிகாரத்தை திருடிய அவர், பிறகு அசாம் வந்து தலைமறைவாகி இருக்கிறார். இதையடுத்து இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நாயை கொடூரமாக கொன்ற இளைஞர் கைது!

Niruban Chakkaaravarthi

வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர் அறிவுறுத்தல்

Gayathri Venkatesan

ஜூலை 27ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

Halley Karthik