தேர்தலை கருத்தில் கொண்டே அதிமுக திட்டங்களை அறிவித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ‘முதலமைச்சர் பழனிசாமி , 2 ஜிபி டேட்டா கார்ட் வழங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் மக்கள் அவருக்கு டாட்டா காட்டத் தயாராகி விட்டனர் எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக திட்டங்களை அறிவித்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வுக்காக சட்டமன்றத்தில் 2 முறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு , டெல்லிக்கு அனுப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அந்த மசோதா குறித்து கேள்வி எழுப்ப முடியாமல் முதலமைச்சர் பழனிசாமி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டு கண்டிப்பாக தை மாதம் பிறந்தவுடன் அடுத்த நான்கு மாதத்தில் கண்டிப்பாக வழி பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை திமுக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக செய்து வந்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டதாக கூறியுள்ளார்.