வரலாற்றில் முதல் முறையாக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்து வருகிறது. பஜெட் எனப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் அனைத்தும் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். அவ்வாறு பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க வேண்டுமென்றால், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் 14 நாட்களுக்குமுன்பே அச்சகத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லாமல் வேலை பார்க்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊழியர்கள் மொத்தமாக கூடுவது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2021-2022 பட்ஜெட்டை ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த முறை பட்ஜெட் அனைத்தும் ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. எம்.பி.க்கள் யாருக்கும் பட்ஜெட் நகல்கள் வழங்கப்படாது.
அவர்களுக்கு அனைத்தும் ஃசாப்ட் காப்பியாக அனுப்பி வைக்கப்படும். அதுபோல் பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான ஆவணங்கள் ஏதும் அச்சடித்து வழங்கப்படாது. அவையும் ஃசாப்ட் காப்பியாக எம்.பி.க்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.