மலேஷியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலேஷியாவில் 3 மாதங்களுக்கு முன் 15 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக 1 லட்சத்து 38 ஆயிரமாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது தவிர நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அவசர நிலையை பிரகடனம் செய்தார்.







