முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை குவிக்க வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங் களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவரும், முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். காலையில் திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், மாலையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை குவிக்க தேவையான வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்

Halley karthi

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை!

Jayapriya

கடைசி நேரத்தில் டோக்கியோ பறந்த இந்திய வீராங்கனை

Saravana Kumar