முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 61.09 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடி நெல் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறுவை நெல் சாகுபடியில், உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், 61.09 கோடி ரூபாய் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம், அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட, கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

Ezhilarasan

தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.

Vandhana

சாலையில் சென்ற கார் தீயில் எரிந்து நாசம்

Vandhana