MIvsSRH | தடுமாறிய ஹைதராபாத்துக்கு கை கொடுத்த கிளாசென் – மும்பை அணிக்கு குறைந்தபட்ச இலக்கு!

மும்பை அணிக்கு எதிராக 144 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

2025 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை இன்று(ஏப்ரல்.23) எதிர்கொண்டு வருகிறது. தெலங்கானாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி சார்பில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹெட் டக் அவுட்டாக, தொடர்ந்து அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த இஷான் கிஷன் 1 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி தடுமாறி வந்தது.

இதையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் எடுத்து ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அவரது ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு ஓரளவு கை கொடுக்கும் வகையில் அமைந்தது.
இவருக்கடுத்து வந்த அபினவ் மனோகர் தனது பங்கிறகு 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 143 ரன்கள் அடித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து மும்பை அணி 144 என்ற இலக்கை சேஸிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.