டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தகுதி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், 400 மீட்டர் மிக்ஸுடு ரிலே பிரிவில் மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகிய 4 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், 5வது நபராக ரேவதி வீரமணி தகுதி பெற்றுள்ளதாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து 5 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவது இதுவே முதன்முறையாகும்.







