திரைப்படமாகும் மிதாலி ராஜ் வாழ்க்கை

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சபாஷ் மித்து’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை தாப்சி பானு நடிக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும் தாப்சி தன்…

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சபாஷ் மித்து’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை தாப்சி பானு நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் நடிக்கும் தாப்சி தன் அனுபவத்தை பற்றி கூறுகையில்,‘மிதாலி ராஜ் கிரிக்கெட் வரலாற்றில் அபார சாதனை புரிந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். அனைவரிடத்திலும் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்றுதான் அனைவரும் கேட்கின்றனர். ஆனால் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வியைதான் அனைவரும் கேட்க வேண்டும். அவரைப்போல் நடிப்பது கடினமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் தாப்சி பானு கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் இதுவரை 75 அரை சதமும், 8 சதமும் எடுத்து சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.