‘மிஷன்’ டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’.  இத்திரைப்படத்தில்…

மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’.  இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி  ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்! பொருளாளர் கார்த்தி அறிவிப்பு!

மிஷன் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.   இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதல் வெளியானது.   இந்த நிலையில்,  இத்திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (ஜன.5) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/LycaProductions/status/1742856091854340235

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.