ஏடிஎம்-ல் தவற விட்ட பணம்: போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

ஏடிஎம் மிஷினில் தவறி விட்டு சென்ற ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்த இளைஞர்க்கு குவியும் பாராட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், 24ம்…

ஏடிஎம் மிஷினில் தவறி விட்டு சென்ற ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்த இளைஞர்க்கு குவியும் பாராட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார்
வங்கி ஏடிஎம்மில், 24ம் தேதியன்று இரவு பணம் செலுத்துவதற்காக சிடிஎம் மிஷினில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, பணம் எண்ணி முடிவதற்குள் அக்கவுண்டில் ஏறி விட்டதாக நினைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து அதே ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக
கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த, செந்தில் முருகன் என்ற இளைஞர் ஏடிஎம்மிற்குள்
சென்றபோது சிடிஎம் மிஷினில் இருந்து தொடர்ந்து ஒலி எழுப்பியவாறு இருந்தது. அருகே சென்று பார்த்தபோது கட்டாக பணம் மெஷினில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்த அவர் ரூ.50, 000 ஐ தவறவிட்டு சென்றவரிடம் ஒப்படைக்க வேண்டுமென கூறி , மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தார். இச்செயலில் ஈடுபட்ட இளைஞர் செந்தில் முருகனுக்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.