கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்தபிறகு, மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல என்றும் இரண்டாம் அலை மற்றும் முதல் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.