ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள்!

பொதுவாகவே அமைச்சர் என்றால் பைலட் வாகனம், பாதுகாப்பு வாகனம் என தடபுடலாக வருகை இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்று அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி…

பொதுவாகவே அமைச்சர் என்றால் பைலட் வாகனம், பாதுகாப்பு வாகனம் என தடபுடலாக வருகை இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்று அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆட்டோவில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’என்னடா அமைச்சர்கள் ஆட்டோவில் வருகிறார்களே என்று பார்க்கிறீர்களா? அதுக்கு காரணம் மறைந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த விரும்பியது தான். சென்னை தியாகராய நகரில் உள்ள ஜெ. அன்பழகன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த முயன்ற போது, அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் கார்களில் இருந்து மூவரும் இறங்கி, ஆட்டோ பிடித்து சென்று தங்கள் கொரோனா தொற்றால் மறைந்த திமுக எம்எல்ஏவின் முதலாமாண்டு நினைவு நாளில், ஜெ. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் ஆட்டோவில் சென்றதற்கு இதுதான் காரணமாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.